ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மாணவிகளை பார்த்து ஆபாச சைகை காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் அந்த பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தனர். உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் மேலப்புலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(20) என்பது தெரியவந்தது. இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.