சென்னை மாவட்டம் புளியந்தோப்பு வ உ சி நகரில் தாஜூதீன் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஹாசீயா(19).  இவர் சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹாசீயா வழக்கம்போல கல்லூரிக்கு சென்றார். இதனையடுத்து தேர்வு எழுதி கொண்டிருந்த ஹாசீயா திடிரென அறையை விட்டு ஓடி வந்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் ஹாசீயாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவரது இடுப்பு மற்றும் கை போன்ற இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஹாசீயாவின் சகோதரி பாத்திமா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது இறப்பு  மாணவி ஹாசீயாவை மிகவும் பாதித்துள்ளது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு மாணவி டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.