
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் அரசு பல சேமிப்பு திட்டங்களையும் ஓய்வூதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதுமை காலத்தில் நிதி உதவி வழங்குகின்றது.
இதில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலமாக ஓய்வு பெற்ற பின்னர் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற முடியும். அதன்படி இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்கும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.npscra.nsdl.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.