சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3.50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு சட்ட விதிப்படி 2022-23 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு வரி தொகை மீது மாதத்திற்கு ஒரு சதவீதம் தனி வட்டி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது.