சென்னை கிண்டி அரசு மகளிர் ஐஐடியில் நேரடி சேர்க்கை தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வரை பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள், இடையில் நின்றவர்கள் ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டு தொழிற் பிரிவுகளில் சேரலாம்.

இந்த பயிற்சியின் போது மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், பாட புத்தகம், 2 செட் சீருடை, பஸ் பாஸ், மாதம் தோறும் 750 ரூபாய் உதவித்தொகை., புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவிகள் வருகின்ற ஜூலை 15ஆம் தேதிக்குள் சேரலாம்.