
தமிழகத்தில் உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்காக https://umis.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்காக தனிப்பட்ட எண் உருவாக்கப்பட்டு அவர்களது செல்போனுக்கு எஸ் எம் எஸ் மூலம் அனுப்பப்படும்.
இதனை தொடர்ந்து மாணவரின் ஆதார் எண், பள்ளிக்கல்வி துறையின் கல்வி மேலாண்மை தரவுகள் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக தகவல் மேலாண்மை அமைப்பு தரவுகள் ஆகியவை மூலம் விண்ணப்பம் ஒற்றைச் சார்ந்த முறையில் சரிபார்க்கப்படும். இதன் பிறகு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் சமூக நலத்துரையால் National automated clearing house மூலமாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மாணவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யும்போதும் மாணவரின் வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் போதும் அவரின் மொபைல் எண்ணுக்கு உடனடியாக எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.