
11 ஆம் வகுப்பு சேர உள்ள மாணவர்கள் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு ஜூன் 11 முதல் 26 ஆம் தேதி வரை https://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளநிலை படிப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி பள்ளிகள் திறந்த உடன் இந்த தேர்வு தொடர்பான விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.