
இந்தியாவில் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது போன்ற திட்டங்களால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற திட்டம் நாட்டின் மூத்த குடிமக்களுக்கு வருமானத்திற்கான மாற்று வழிகளை வழங்கும் காப்பீட்டுக் கொள்கை மற்றும் ஓய்வூதிய திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலமாக வயதான தம்பதிகள் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டம் பத்து வருட கால வரையறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பெற முடியும்.