
தமிழகத்தில் பல தனியார் கல்லூரிகளிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதுவிதமான படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது சென்னை Loyola, I CAM College of Engineering and Technology மற்றும் Risaya Academy இணைந்து Sound Engineering என்ற புதிய தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பை தற்போது தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இசையின் அனைத்து தொழில்நுட்பத்தையும் 12 பாட பிரிவுகளாக ஆறு மாதம் மற்றும் ஒரு வருட டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகின்றது. இங்கு ஒரு வருட படிப்பை முடித்துவிட்டு நேரடியாக ஆஸ்திரேலியாவில் உள்ள JMC யுனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படிப்பை தொடரலாம். இந்த படிப்பின் சிறந்த வல்லுனர்களாக செயல்பட்டால் மாதம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.