2024 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரருக்கு அளிக்கப்படும் நிரந்தர கழிவு தொகை 50,000 ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய வரி விகிதத்தின் கீழ் இனி 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய வரி விகிதத்தின் கீழ் வரி செலுத்துவோர் என்றால் இரண்டு லட்சத்திற்கு காப்பீடு மற்றும் செலவு உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்தால் வரி செலுத்த வேண்டாம்.

ஆண்டு வருமானம் ஒன்பது லட்சம் ரூபாய் என்றால் பழைய வரி விகிதத்தின் கீழ் 96,200 ரூபாய் வரி செலுத்த வேண்டும். அதே நேரம் அவர் 2 லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை கணக்குகள் தாக்கல் செய்தால் வருமான வரியை 33 ஆயிரத்து 800 ரூபாய் வரை குறைக்க முடியும். 4 லட்சத்துக்கு கணக்கு தாக்கல் செய்தால் ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் புதிய வரி விகிதம் எனில் அவர் கட்டாயம் 46 ஆயிரத்து 800 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும்.