
புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் புதுக்கோட்டை நகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் நாமக்கல் நகராட்சி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக அறிவித்ததற்கான அரசாணையை முதலமைச்சர் ஸ்டாலின் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்திலிடம் வழங்கினார். இதனை அடுத்து நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.