சென்னை மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டில் மட்டும் ​ரூ.2750 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.1,733 கோடி வரி வசூல் செய்த நிலையில் 2024 -25ல்
ரூ.1,017 கோடி அதிக வரி வருவாய் அதிகரித்துள்ளது.

மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். இன்று முதல் செலுத்தப்படும் முந்தைய நிதியாண்டுகளுக்கான சொத்து வரிக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.