
மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றுக் கொண்டார்.
முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், மாநிலங்களவை உறுப்பினரானார் சோனியா காந்தி.

புதிய அத்தியாயத்தை தொடங்கும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவி ஸ்ரீமதி அவர்களுக்கு எனது வாழ்த்துகள். சோனியா காந்தி இன்று ராஜ்யசபாவில் பதவியேற்பதன் மூலம் தனது புதிய இன்னிங்ஸை தொடங்கினார்.சோனியா காந்தியின் துணிச்சலும், கண்ணியமான கருணை நாடாளுமன்றத்தை வழிநடத்தும்.
அவர் மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார், இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் மேல்சபையில் அவரது இருப்பை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள் ” என தெரிவித்துள்ளார்.
My best wishes to the Congress Parliamentary Party Chairperson, Smt. Sonia Gandhi as she begins her new innings, by taking oath in the Rajya Sabha, today.
Her courageous resilience and dignified grace, in the wake of adversity and upheaval, shall continue to guide our… pic.twitter.com/ReMunHsCbq
— Mallikarjun Kharge (@kharge) April 4, 2024