மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு எப்போது என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 5% உயர்த்தப்பட்டது.

தற்போது மீண்டும் சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 5% உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு 5% அகலவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதிச் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சத்தீஸ்கர் மாநிலத்தில் விருப்ப ஓய்விற்கான தகுதி சேவை காலத்தை 20 ஆண்டுகளில் இருந்து 17 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.