சேலம் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் ஜூலை 5ஆம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரின் அணுகி திட்ட விளக்கங்களை பெற்ற உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முட்டை மற்றும் கறிக்கோழி என பல்வேறு வகையில் லாபம் கொடுக்கும் இந்த துறையை சார்ந்தவர்கள் சுய தொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.