
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சப்னா என்பவர் தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு ஓடிப்போன சம்பவம் தான் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தன் மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நிச்சயக்கப்பட்ட நிலையில் அவர் வருங்கால மாப்பிள்ளை ராகுலுடன் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார்.
அவர் செல்லும் போது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் போன்றவற்றை எடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை சப்னா மறுத்த நிலையில் பின்னர் ஓடிப்போன மாப்பிள்ளை ராகுலுடன் அவர் போலீஸ் ஸ்டேஷனில் வந்து சரணடைந்ததோடு வாழ்ந்தால் அவரோடு தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார்.
सासु जी को सच्चा प्यार नहीं मिला था , दामाद के रूप में मिला फिर
— Arun Yadav (@ArunKosli) April 20, 2025
“>
இந்நிலையில் சப்னாவின் 2 வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தன்னுடைய கணவர் ஆண்மை தன்மை இல்லாதவர் எனவும் அடிக்கடி குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவார் , எனது கையில் பணம் கொடுப்பதே இல்லை , அவர் ஒருநாளும் அன்பாக நடந்து கொண்டதே இல்லை … ஒரு பெண் அதேதான் எதிர்பார்ப்பாள்.. ஆனால் நான் அங்கு மகிழ்ச்சியாக இருந்ததில்லை.. நான் தற்போது ராகுலுடன் வாழ முடிவு செய்ததாக கூறியதோடு தன் மகளும் தந்தையுடன் சேர்ந்து தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.
याद है ना दामाद जी के साथ भागने वाली साथ
अब सासू मां दामाद जी से प्रेग्नेंट हो गई है और पुलिस डॉक्टर के पास ले गई है
पता नहीं इस कलयुग में और क्या-क्या देखना बाकी है pic.twitter.com/WswQPrctfB
— Kikki Singh (@singh_kikki) April 20, 2025
“>
அதன் பிறகு தற்போது ராகுலுடன் சென்ற சப்னா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் அவர் கர்ப்பமாக இருப்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.