மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அத்ரைலா கிராமத்தில் சரோஜ் கோல் (50) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனுக்கு திருமணமாகி காஞ்சன் கோல் (24) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தில் தன் மாமியாரை அவர் 95 முறை கத்தியால் கொடூரமாக குத்தினார். இது தொடர்பாக காஞ்சனின் கணவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பிறகு தன் தாயை அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் காஞ்சன்கோல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. மேலும் அதன்படி மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.