ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான போட்டியில் லக்னோ அணியானது நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது .முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20  ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்து. இதன்பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியானது 7 விக்கெட் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணியானது கொல்கத்தா அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது.

இந்த ஆட்டத்தில் லக்னோ சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி சுனில் நாராயணன் விக்கெட்டை கைப்பற்றினார். இதனை தரையில் எழுதி வித்யாசமான முறையில் கொண்டாடினார். கடந்த இரண்டு போட்டிகளிலும் விக்கெட்டை வீழ்த்தியது கையில் எழுதுவது போல கொண்டாடியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக தரையில் எழுதி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தனது கைகளில் எழுதியால்தானே அபராதம் விதிச்சாங்க தரையில் எழுதுகிறேன் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம் என்பது போல இருந்ததாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.