ரஷ்யாவில் நேற்று எம் ஐ 8 டி என்னும் ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா என்னும் கிராமத்தில் உள்ள தளத்திற்கு சென்றது. அப்போது வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரங்களில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் தனது தொடர்பை துண்டித்த நிலையில்  திடீரென காணாமல் போனது. இதில் 3 பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என 22 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் மீட்பு பணி குழுவினர் மாயமான ஹெலிகாப்டரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஹெலிகாப்டரின் பாகங்கள் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் சுக்கு நூறாக நொறுங்கி பயங்கர விபத்து நடந்துள்ளது என தெரிய வந்தது. மேலும் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.