கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு அடுத்த மாமங்கலம் அரசு பள்ளியில் மலர் செல்வம் என்பவர் வேதியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த  கல்வியாண்டில் அந்தப் பள்ளியில் படித்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. தற்போது அந்த மாணவி சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த மாணவியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிறிது நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் மாணவியின் பெற்றோருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் விசாரணை நடத்திய போது ஆசிரியர் மலர் செல்வம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மலர் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மலர் செல்வம் செய்முறை வகுப்பில் வைத்து அந்த மாணவியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என மாணவியை மிரட்டியுள்ளார். இதனால் அவர் யாரிடமும் கூறாமல் இருந்தது தெரியவந்தது. தற்போது அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மலர் செல்வம் வேறு சில மாணவிகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.