
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஒரு ஆயுதப்படை காவலர் ஒருவர் பணிக்கு தாமதமாக வந்துள்ளார். இதற்காக அவர் கொடுத்த விளக்க கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது கடந்த மாதம் 16ஆம் தேதி சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் வேலைக்கு தாமதமாக வந்ததோடு சரிவர வேலையை செய்யாமல் இருந்துள்ளார். இதனால் அதற்கு அடுத்த நாள் அவருக்கு ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அந்த கான்ஸ்டபிள் விளக்கம் கொடுத்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தினசரி இரவு என்னுடைய மனைவி என் மார்பின் மீது அமர்ந்து என் ரத்தத்தை குடிப்பது போன்ற பயங்கர கனவு வருகிறது.
இதனால் என்னால் தூங்க முடியவில்லை. இதனால்தான் வேலைக்கு வர தாமதமாகிவிட்டது. இதற்காக மனச்சோர்வுக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன். என்னுடைய தாயாருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதால் இது கூடுதல் மன பாதிப்பை எனக்கு ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வாழ்வதற்கான விருப்பத்தை இழந்து விட்டதாகவும் கடவுளின் பாதத்தில் சரணடைய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஆன்மீக ரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தன்னுடைய துயரம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறியுள்ளது.