
ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தம் அடையக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தின் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டாய கல்வியை வழங்கிட சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.