கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளார்.

இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரத்தை கொடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.