நாமக்கல்லில் 38,334 மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். அதில் 19,410 தனித்துவம் வாய்ந்த மாற்றித் திறனாளிகள் அடையாள அட்டை. இந்நிலையில் மீதமுள்ள 18,924 மாற்று திறனாளிகளுக்கும் எந்த சிரமமும் இன்றி தனித்துவமான அடையாள அட்டை கிடைக்க பெறுவதற்கு சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

அதன்படி டிசம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை அந்தந்த பகுதிகளில் இருக்கும் இ சேவை மையங்கள் மூலமாக மிகக் குறைந்த சேவை கட்டணத்தில் தனித்துவமான அடையாள அட்டைக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடையாள அட்டை, மருத்துவ சான்று, ஆதார் அட்டை போன்றவற்றின் அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.