இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மறுபக்கம் ஆதார் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வாக மக்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் மாஸ்க்டு ஆதார் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டைக்கு பதிலாக இது பயன்படுத்த முடியும்.

இந்த ஆதாரில் 12 இலக்க ஆதார் எண்ணில் 8 எண்கள் மறைக்கப்பட்டு கடைசி நான்கு எண்கள் மட்டும் இடம்பெறும். மாஸ்க்டு ஆதார் பெற UIDAI அமைப்பின் https://myaadhar.uidai.gov.in/masked-aadhar என்ற இணையதளத்தில் login என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு ஆதார் எண் மற்றும் கேப்சா கொடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு வரும் ஓடிபி மூலம் லாகின் செய்ய வேண்டும். பிறகு download Aadhar என்பதை கிளிக் செய்து masked aadhar என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் மாஸ்க்டு ஆதார் டவுன்லோட் ஆகும்.