
புயல் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.1011.29 கோடியை பிரதமர் மோடி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.5060 கோடி கேட்டிருந்தது. இந்தநிலையில், பேரிடர் நிவாரண தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக ரூ.450 கோடியை மத்திய அரசு அனுப்பியது. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, நிதியளிப்பதற்கான வங்கி எண்ணை அரசு அறிவித்துள்ளது.
https:// cmprf.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பேங்கிங், Debit Card, Credit Card மூலமாகவும், சென்னை ஐ.ஓ.பி. கணக்கு எண் 117201000017908 )IFSC-IOBA0001172) வழியாகவும் நிதி அனுப்பலாம். புயல் நிவாரண நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G)ன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு. என்று அரசு அறிவித்துள்ளது.