
ஹரியானா மாநிலத்தில் மிகப்பெரிய கோர விபத்து நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் பஞ்ச் குலா இன்று காலை பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பேருந்தை அதிவேகமாக ஓட்டியது, அதிக பயணிகளை ஏற்றி சென்றது மற்றும் சாலையின் மோசமான நிலை ஆகியவையே இந்த கோர விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.