ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 6 வயதுடைய ஆரிஃப் என்ற சிறுவன் மிட்டாய் வாங்குவதற்காக சென்றுள்ளார். மிட்டாய் வாங்கி விட்டு வெளியே வரும் போது தனது அண்டை வீட்டில் வசிக்கும் ஒருவரை பார்த்துள்ளார்.

அவர் வீட்டிற்கு செல்வதாக நினைத்து ஆரிஃப் பின் தொடர்ந்து சென்றார். ஆனால் அந்த நபர் காரில் ஏறி சென்றதால் வழி தவறி ஆரிஃப் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தார். இதனை பார்த்து சிலர் ஆரிஃபை மீட்டு போலீஸில் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு ஆரிஃப் ஆசிரமங்களில் வளர்ந்தார். இந்த நிலையில் பெற்றோரின் தொடர் தேடுதலால் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு ஆரிஃப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.