மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று உறவினர்கள் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வார்கள். விரக்தி மனப்பான்மையுடன் பேச வேண்டாம். நிலுவை பணம் வசூலிப்பதில் இதமான அணுகுமுறை நன்மையை கொடுக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழல் காணப்படும். மனதில் இருக்கும் இறுக்கம் விலகிச் செல்லும்.

வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படலாம். இன்று மாணவர்கள் பேச்சை குறைத்துக் கொண்டு கல்வியில் ஈடுபடுவது நல்லது.

சக மாணவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபம் அவ்வப்போது வெளிப்படும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு, ஆறு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்