மிதுனம் ராசி அன்பர்களே,
இன்று சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சிலர் உங்களிடம் உதவி கேட்டு வரக்கூடும். நீங்களும் மற்றவர்களிடம் உதவி பெறும் சூழல் உள்ளது. சந்தர்ப்பங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். கொஞ்சம் பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவது நல்லது.
வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவை. கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசி எடுக்க முடிவுகள் வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சந்திப்பீர்கள். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தடை ஏற்பட்டு பின்னர் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இன்று மன மகிழ்ச்சி இருக்கும். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும்.
நிதி நெருக்கடிகளை சமாளித்து விடுவீர்கள். இன்று மாணவர்கள் மூடநம்பிக்கைகளை கவனம் கொள்ள வேண்டாம். கல்வி மீது அக்கறை வேண்டும். நிதி தொடர்பான விஷயங்களை சிறுவயது முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் பிரவுன் நிறம்