சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மொத்தம் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 20 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதேபோன்று கூடுவாஞ்சேரிக்கு 30 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்பிறகு தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் பிராட்வேவுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. மேலும் அதன்படி மொத்தமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கிறது.