
புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு செட்டிபட்டு சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது 10 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்படுவதால் மோட்டார்களை இயக்க முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு விவசாயம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து புகார் அளிக்க மின்னலுலகத்தில் உள்ள தொலைபேசியை தொடர்பு கொண்டால் யாரும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருக்கனூர் மின்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அதிகாரிகளின் நாற்காலியில் அமர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.