
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது முதலாவது IndiaAl அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 235 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தில் 967 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 500 பில்லியன் டாலர்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது நாட்டின் ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கில் 10 சதவீதம் பங்கை கொண்டிருக்கும். தற்போது உள்ள செயற்கை நுண்ணறிவானது சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு இடைவெளிகளை குறைப்பதற்காக என்று துல்லியமான மற்றும் ஒருங்கிணைந்த உத்தியை உறுதி செய்யும் திட்டம் சார்ந்த அணுகுமுறையை IndiaAl கொண்டுள்ளது.