தமிழக மின்வாரியத்தில் புதிய மின் இணைப்பு மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற மின்சார சேவைகளுக்கு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்துவது போன்ற மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர்  பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்வாரிய இணையதளத்தில் இருந்து மத்திய அரசின் மின் சேவைகள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றின் இணையதளங்களுக்கு செல்வது போன்ற பல புதிய வசதிகளும் இந்த புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.