
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விடுமுறையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் இணைந்து மின் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தர மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவதை தவிர்க்க வேண்டும். பூங்கா மற்றும் பொது இடத்தில் விளையாடும் போது மின் வயர் மற்றும் மின்பட்டி இருந்தால் அருகில் செல்லவோ தொடர்வோ கூடாது என்பதை ஆசிரியர்கள் தங்களது பள்ளி குழுக்களில் அறிவுறுத்தலாம் என தெரிவித்துள்ளது.