ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியா நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா இந்தியா மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 92 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இறுதியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.