
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மிர்ச்சி சிவா. இவர் தற்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி இயக்கியுள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பாடகர் மனோ, மாகாபா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை லார்க் ஸ்டூடியோஸ் சார்வில் கே. குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த டிரைலர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற திரைப்படம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.