
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்பி துரை வைகோ, இருக்கின்ற பாடங்களை படிப்பது மாணவர்களுக்கு கஷ்டமாக உள்ளது. இதில் மூன்றாவது மொழியில் கற்க வேண்டும் என்று சொல்வது எதற்காக? இந்தியை மறைமுகமாக திணிக்க பார்க்கிறார்கள் என்று தான் நான் சொல்கின்றேன். மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்கலாம் என்ற சொல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து எந்த மொழியை தமிழகம் மாணவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்? அவர்களுடைய கட்டாய விருப்பம் என்பது ஹிந்தியை நோக்கி தான் இருக்கும். ஆகவே இந்தியை மறைமுகமாக திணிக்க இருக்கிறார்கள் என்று நான் சொல்கின்றேன்.
மிஸ்டர் அண்ணாமலை, முகலாயர்களால், பிரிட்டிஷ்காரர்கள், கிறிஸ்தவ அமைப்புகளால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது. 50 ஆண்டுகளுக்கு முன்பு சனாதனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. அதற்குக் காரணம் அம்பேத்கரும், அண்ணாவும் பெரியாரும் தான். சனாதனத்தை வேரோடு அறுப்பது அனைவரின் கடமை. இரண்டு பிறவியில் கொடுக்க வேண்டிய உழைப்பை தலைவர் வைகோ ஒரே பிறவியில் கொடுத்துள்ளார். இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது. இன்று இரவு தலைவர் நிம்மதியாக உறங்குவார். தலைவரின் சுமையை குறைப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் நான் கிடையாது. உங்களால் இழுத்து வரப்பட்டவன் நான். அடிப்படைத் தொண்டனாக இருக்கின்றேன். அது போதும் என்று துரை வைகோ பேசியுள்ளார்.