
அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதன் பிறகு திமுக ஆட்சியை பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது அதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, குரலை உயர்த்தி கைகளை சுழற்றி பேசினால் திமுகவை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சிக்காக பாஜகவிடம் ஆண்டி பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்போது கூட பாஜகவை எதற்குமே கண்டிக்காமல் வலிக்காமல் வலியுறுத்திவிட்டு மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சர் ரகுபதி கத்தி கத்தி பேசினால் போதாது உண்மையை பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.