
மும்பையில் Femina Miss India 2024 அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த அழகியாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது மிஸ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் இவர் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார்.
மேலும் நிகிதா போர்வால் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய நிலையில் சினிமாவில் நாடகங்கள் மற்றும் மேடை நாடகங்கள் போன்றவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவருக்கு தற்போது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.