
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த மாணவிக்கு தொடர்ந்து குமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் மாணவி மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறவே அவர்கள் புகார் கொடுத்தனர்.
அந்த கல்லூரியின் முதல்வர் கமிட்டி அமைத்து விசாரணை நடத்திய நிலையில் குமார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மேலும் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருவது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.