சிவகங்கை மாவட்டத்தில் சரவணன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருக்கிறார். இவர் இன்னும் 3 மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில் சரவணன் தான் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளியில் நடந்த பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அதிகாரிகளிடம் கூறினார். இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை  கைது செய்தனர்.