திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் பகுதியில் ராஜு (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராஜூவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நட்பாக இருவரும் பழகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு அந்த பெண் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு ராஜூ காரில் வந்த நிலையில் தன்னுடன் வருமாறு அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். வீட்டில் கொண்டு விடுவதாக ராஜு கூற அந்த பெண் மறுப்பு தெரிவித்த போதிலும் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

ஆனால் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் கன்னியாகுமரியை நோக்கி ராஜு சென்றுள்ளார். உடனடியாக அந்த பெண் எங்கே அழைத்து செல்கிறாய் என்று ராஜுவிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். எப்படியோ அவரிடமிருந்து தப்பித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே ராஜூவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு தலையாக அந்த பெண்ணை காதலித்து வந்ததும் அவர் காதலை ஏற்காததால் கடத்தி  சென்றதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.