பெங்களூருவில் வேலை இருப்பதாக கூறி ஒரு இளம் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் இந்திரா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நேற்று முன்தினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது. இந்நிலையில் அந்த மையத்திலிருந்து வெளி மாநிலங்களைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்திரபிரதேசம் மற்றும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த இளம்பெண்களை காப்பகத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்த நிலையில் அங்கிருந்த மணி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய  விசாரணையில் வேலை வாங்கி தருவதாக கூறி  இளம் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்தது. இதில் கிடைக்கும் பணத்தில் மணி மற்றும் அந்த மையத்தின் முதலாளி ஆகியோர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது அந்த மையத்தின் உரிமையாளரான உபேன்ராதி தலைமறை வாகிவிட்டார். அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.