
அஜ்மீர் மாவட்டத்தின் நசீராபாத் சதார் பகுதியில் கணவனை கொலை செய்ய மனைவி தனது ஊனமுற்ற காதலருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 29 வயதான ஜந்தா என்பவர், தனது காதலர் பஷீர் கானுடன் (29) சேர்ந்து கணவரான மஸ்தானை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரமான சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி காலை, ராஜூசி ரோட்டில் உள்ள தமன்னா காலனிக்கருகே ஒரு ஆண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக நசீராபாத் சதார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றினர். பின்னர் அந்த உடல் ராஜூசி கிராமத்தை சேர்ந்த மஸ்தான் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டது. அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, கிரைம் ஸ்பாட்டிலிருந்து மின்னணு மற்றும் தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன.
राजस्थान के अजमेर जिले के नसीराबाद सदर थाना क्षेत्र में हत्या की एक दिल दहला देने वाली वारदात सामने आई है। यहां एक महिला जनता (29) ने अपने दिव्यांग प्रेमी बशीर खान के साथ मिलकर अपने ही पति मस्तान को मौत के घाट उतार दिया। पति अपने पत्नी के प्रेम प्रसंग में बाधा बन रहा था।
मृतक… pic.twitter.com/1Rih22C2wm
— TRUE STORY (@TrueStoryUP) April 11, 2025
பின்னர் மஸ்தானின் இளைய சகோதரர் அளித்த புகாரின் பேரில், மனைவி ஜந்தா மற்றும் அவரது காதலர் பஷீர் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, ஜந்தா தனது கணவரை பஷீர் கானுடன் மதுபானம் குடிக்க அனுப்பி, மது பருகிய பின் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்தது. மொபைல் லொகேஷன் மற்றும் உள்ளூர் உளவுத்தகவலின் மூலம், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, இந்த கொலை வழக்கில் கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் முஷ்கான் என்பவர் தன்னுடைய கணவர் சௌரப் ராஜ்புதை காதலன் சாகலுடன் இணைந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் தன் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.