உத்தரப் பிரதேசத்தின் மிர்சாமுராத் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் மகா கும்பமேளா விழாவில் கலந்துகொள்ள சிலர் ஜீப்பில் புறப்பட்டு பிரயாக்ராஜ் நோக்கி சென்றனர். அப்போது  ஜீ.டி. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி மீது ஜீப் மோதி கோர விபத்து நடந்தது. காயமடைந்தவர்கள் குஷி (10), கவிதா (48), சிவ் சாய் (15), கணேஷ் (14), சுலோச்சனா (50), அனிதா (50) மற்றும் சுஜாதா (32) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் கர்நாடக மாநிலம், நமோபாடி (விடூர்) பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டது. உயிரிழந்தவர்கள் சந்தோஷ்குமார் (50) மற்றும் அவரது மனைவி சுனிதா (45), லட்சுமி (49), நீலம் (அ) லால்வதி) (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் முற்றிலும் சேதமடைந்த ஜீப்பை கிரேன் மூலம் வெளியேற்றிய போலீசார், போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.