தமிழகத்தில் சமீபத்தில் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த அந்த கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஓடும் ரயிலில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நேற்று ஈரோடு அருகே புனே-கோவை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏசி பெட்டியில் இருந்த 8 வயது சிறுமிக்கு ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது படுக்கை விரிப்புகளை மாற்றும் நவநீதம் சிங் என்ற 30 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்ட நிலையில் ரயில் மெதுவாக செல்லும் நேரத்தில் அவர் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று நவநீதம் சிங்கை கைது செய்த நிலையில் அவரிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.