அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன் என ஆவேசமடைந்த அவர், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் அரசியல் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தொண்டர்களை சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்க உழைப்பேன் எனவும் சூளுரைத்துள்ளார்.

மேலும் அதிமுக முடிந்து விட்டது என யாரும் கருத வேண்டாம் என கூறிய அவர், தனது என்ட்ரி ஆரம்பமாகிவிட்டதாக சவால் விடுத்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து வரும் சூழலில், அதிமுக தொண்டர்களை சசிகலா தன் வசப்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.