இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளுமே கன்னிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகள் ஏற்படுவது அதிகரிப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்கள் அனைத்தையும் வங்கிகள் சரியாக வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வங்கிகள் தங்கள் KYC அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கனவே ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் விவாதித்து வருகிறது. குறிப்பாக ஒரே ஃபோன் எண்ணில் வெவ்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் அல்லது கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள் மீண்டும் ஒருமுறை KYCஐ அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். மேலும், பல்வேறு வகையான ஆவணங்களுடன் பல்வேறு கணக்குகளை துவக்கியவர்கள் கூடுதல் தகவல்களை வங்கிகளுக்கு அளிக்க வேண்டி வரும் என தெரிகிறது.