பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் stand up காமெடியனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து தற்போது வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக அயலான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது தெட்ட தெளிவாக தெரிகின்றது. ஆனாலும் இதுவரை சிவகார்த்திகேயன் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் குழந்தை பிறந்தவுடன் அறிவிப்பார் போல என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.